மத்திய பிரதேச மாநிலம் தமோவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், போலி மருத்துவர் ஒருவர் இதய அறுவை சிகிச்சை செய்ததில் ஏழு பேர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குற்றவாளியின் உண்மையான பெயர் விக்ரமாதித்ய யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் தன்னை பிரிட்டனில் இருந்து வந்த மருத்துவர் என். ஜான் கேம் என அடையாளம் கூறி, மருத்துவமனையில் வேலையில் சேர்ந்துள்ளார்.
இந்த போலி மருத்துவர் இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார், ஆனால் சிகிச்சைக்குப்பின் பலரும் உயிரிழந்தனர்.
இது குறித்து மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் மற்றும் வழக்கறிஞர் தீபக் திவாரி கூறுகையில், உயிரிழந்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை ஏழு என்றாலும், உண்மையான எண்ணிக்கை அதைவிட அதிகமாக இருக்கலாம் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் போலி மருத்துவர் விக்ரமாதித்ய யாதவ் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.