GST இழப்பீடு தொகை – 21 மாநிலங்களுக்கு வழங்கியது மத்திய அரசு

478

ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டுமென பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு கடந்த 26ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையிலேயே நிலுவைத்தொகையை விடுவிக்க வலியுறுத்தினார்.

இந்நிலையில் மாநில அரசுகளுக்கு நிலுவையில் உள்ள 86 ஆயிரத்து 912 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது.

இதில் தமிழ்நாட்டிற்கு 9 ஆயிரத்து 602 கோடி ரூபாய் நிலுவைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவிற்கு 14 ஆயிரத்து 145 கோடி ரூபாயும், உத்தரப் பிரதேசத்திற்கு 8 ஆயிரத்து 874 கோடி ரூபாயும் விடுவிக்கப்பட்டள்ளது.

கர்நாடகாவிற்கு 8 ஆயிரத்து 633 கோடி ரூபாயும், டெல்லிக்கு 8 ஆயிரத்து 12 கோடி ரூபாயும் விடுவிக்கப்பட்டுள்ளது.

மே 31ஆம் தேதி வரையிலான நிலுவைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.