தமிழக ஆளுநர் – பிரதமர் சந்திப்பு ஏன்?

223
Governor-R.N.-Ravi-meets-PM-Modi
Advertisement

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்டமசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கடந்த அக்டோபர் 13ஆம் தேதி நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்தார்.

ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு அரசியல் நிலவரம், நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு குறித்து தமிழ்நாடு ஆளுநர் மளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டின் நலனுக்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று பிரதமர் மோடி, உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதைதொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேச உள்ளார்.