தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் நகை பிரியர்கள் கலக்கம் அடைந்து வருகின்றனர். தங்கம் விலை இன்று காலை கிராமுக்கு ரூ.125 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,025க்கும் சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.72,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,100க்கும் சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.72,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.