Tuesday, December 9, 2025

அதிரடியாக சரிந்த தங்கம் விலை! இல்லத்தரசிகள் நிம்மதி! இப்படியே விலை குறைவு நீடிக்குமா?

சென்னையில்  அக்டோபர் 27 அதாவது இன்று தங்க விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம், இன்று விலை குறைந்துள்ளதால் நுகர்வோரிடையே சிறிய அளவில் நிம்மதி தலை தூக்கியது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 குறைந்து தற்போது ரூ. 91,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 11,450 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று இது ரூ. 11,500 க்கும் மேலாக இருந்தது. எனவே, ஒரு சவரனுக்கு ரூ. 400 வரை குறைந்திருப்பது தங்கம், வாங்குபவர்களுக்கு சிறிய அளவில் ஆறுதலாக பார்க்கப்படுகிறது.

சர்வதேச தங்கச் சந்தையில் ஏற்பட்ட விலை மாற்றங்களே இந்த சரிவுக்குக் காரணமாகும். குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் பொருளாதார வளர்ச்சி மந்தமாகியிருப்பது, டாலர் மதிப்பு சிறிதளவு உயர்ந்திருப்பது ஆகியவை தங்கத்தின் விலையைத் தற்காலிகமாக குறைத்து விட்டதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதே நேரத்தில், சில வணிக வட்டாரங்கள் இந்த சரிவு நீண்ட காலம் நீடிக்காது என்றும், வரவிருக்கும் பண்டிகை சீசன் மற்றும் திருமண சீசனில் மீண்டும் விலை உயர்வை காணலாம் என்றும் கூறுகின்றன. ஏனெனில், அந்த காலத்தில் தங்கத்துக்கான தேவை எப்போதுமே அதிகரிக்கும்.

இதனால், தங்கம் வாங்கத் திட்டமிட்டுள்ள நுகர்வோருக்கு தற்போது சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், சந்தை நிலவரத்தைப் பொறுத்து விலை மீண்டும் உயர வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Related News

Latest News