சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 19-ந்தேதி சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.1,08,560-க்கும், ஒரு கிராம் ரூ.13,570-க்கும் விற்பனையானது. தொடர்ந்து 20-ந்தேதி சவரனுக்கு ரூ.640-ம், 21-ந்தேதி ரூ.800-ம், 22-ந்தேதி ரூ.1,240-ம், 23-ந்தேதி ரூ.1,400-ம் குறைந்தது. இதனால் தங்கம் விலை படிப்படியாக சரிந்து சவரன் ரூ.1,04,480-க்கு விற்பனையானது.
24-ந்தேதி சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.1,04,560-க்கும், ஒரு கிராம் ரூ.13,070-க்கும் விற்பனையானது. நேற்று இதே விலையில் தங்கம் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.1,04,680-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.13,085-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.220-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.20 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.
