உத்தர பிரதேசத்தின் லக்னோவில் இருந்து, மஹாராஷ்டிராவின் மும்பை நோக்கி புஷ்பக் விரைவு ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. மஹாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள மாஹேஜி மற்றும் பர்தாதே ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பச்சோரா என்ற இடத்தை நேற்று மாலை 5:00 மணிக்கு அடைந்தது.
அப்போது, அந்த ரயிலில் தீப்பிடித்ததாக தகவல் பரவியது. இதனால் அச்சமடைந்த பயணிகள் ரயிலின் அபாய சங்கிலி பிடித்து ரயிலை நிறுத்தியுள்ளனர். பயணியர் பலர் அவசர அவசரமாக தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள கீழே இறங்கி தப்பிக்க முயன்றனர். அப்போது அடுத்த தண்டவாளத்தின் எதிர்திசையில், கர்நாடகாவின் பெங்களூரில் இருந்து டில்லியை நோக்கி கர்நாடகா விரைவு ரயில் வந்தது. ரயிலில் மோதி 13 பேர் உயிரிழந்தனர்.
டீ விற்கும் நபர் ஒருவர் ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தியை பரப்பியதால், 13 பேர் ரயிலில் இருந்து அவசரமாக கீழே குதித்து பலியானதுக்கு காரணாம் என விபத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.