வான் தாக்குதலை வானத்திலேயே முறியடிக்கும் வகையிலான ஏவுகணையை உருவாக்கும் இந்தியா

425

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO வான் தாக்குதலை வானத்திலேயே முறியடிக்கும் வகையிலான ஏவுகணையை உருவாக்கி வருகிறது.

இந்த உள்நாட்டு ஏவுகணை 300 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து எதிரியின் வான் தாக்குதலை முறியடிக்கக்கூடியது.

இதேபோல், மற்றொரு ஏவுகணை 160 கி.மீ தூரம் வரை தாக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. ஆஸ்ட்ரா எம்.கே 2 மற்றும் எம்.கே. 3 ஆகிய இந்த இரண்டு ஏவுகணைகளும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சோதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.