‘டிராகன்’ நாயகியின் திடீர் அறிவிப்பு வைரல்..

சமீப காலமாக தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் கவனம் ஈர்த்து வரும் நடிகை காயடு லோஹர், சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த திடீர் முடிவு ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் வெளியான டிராகன் மற்றும் மலையாளத் திரைப்படமான பள்ளிச்சட்டம்பி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் காயடு லோஹர் பரவலாக அறியப்பட்டார். இந்நிலையில், தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

அந்த பதிவில், தனக்கு மன ரீதியாக ஒரு இடைவெளி தேவைப்படுவதாகவும், டிஜிட்டல் உலகத்திலிருந்து சிறிது காலம் விலகி சுய அமைதியைத் தேட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். உடலுக்கு ஓய்வு அளிப்பது போல மனதிற்கும் ஓய்வு அவசியம் என்றும், திரைக்கு அப்பாலான வாழ்க்கையை அனுபவித்து தனக்கான நேரத்தை செலவிட இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த இடைவேளையின் போது தனது திரைப்படங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் தொடர்பான தகவல்களை அவரது குழுவினர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றியும் அன்பும் தெரிவித்த அவர், “See You Soon” என்ற வாசகத்துடன் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.

தற்போது காயடு லோஹர் பல முக்கிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஐ அம் கேம், தி பேரடைஸ், இதயம் முரளி, இம்மார்டல் மற்றும் மஞ்சணத்தி உள்ளிட்ட படங்கள் இடம்பெறுகின்றன. இந்த இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் புத்துணர்ச்சியுடன் ரசிகர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News