கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா முதலமைச்சர் பட்னாவிசுக்கும், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே மோதல் நிலவுவதாக தகவல்கள் வெளியானது. ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக இருந்தபோது ஜல்னா நகரில் ரூ.900 கோடி ரூபாய்க்கான திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்தார். தற்போது அந்தத் திட்டத்தை பட்னாவிஸ் அரசு தற்போது நிறுத்திவைத்துள்ளது.
இந்நிலையில் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது : என்னை இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள். 2022-ல் என்னை சிலர் இலகுவாக எடுத்துக் கொண்டனர். நான் அந்த அரசாங்கத்தையே கவிழ்த்துவிட்டேன். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் பேசியுள்ளார்.