Wednesday, January 21, 2026

நடிகர் விஜயை விமர்சிக்க வேண்டாம் : அமைச்சர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், கடந்த வாரம் சனிக்கிழமை (13-ந் தேதி) தனது பிரசாரத்தை திருச்சியில் தொடங்கினார். இன்று நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க.வையும், தமிழகத்தில் ஆளும் தி.மு.க.வையும் விஜய் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் விஜயை விமர்சித்து அமைச்சர்கள் யாரும் பதில் கூற வேண்டாம். எல்லாவற்றையும் கட்சித் தலைமை பார்த்துக்கொள்ளும். ஏதாவது, விஜய் கருத்துக்கு பதில் அளிக்கும் நிலை ஏற்பட்டால், கட்சித் தலைமையில் இருந்தே அது வெளிவரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related News

Latest News