Tuesday, April 22, 2025

மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக போராட்டம்

100 நாள் வேலை திட்ட பணியாளர்களின் நிலுவை தொகை விடுவிக்க கோரி தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் மத்திய அரசு நிலுவை தொகையை தமிழகத்திற்கு விடுவிக்காமல் இருந்து வருகிறது.

இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. 100 நாள் வேலை திட்ட பணியாளர்களின் நிலுவை தொகையை விடுவிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய 4 ஆயிரத்து 34 கோடி ரூபாய் நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வருவதாக தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

Latest news