Tuesday, June 24, 2025

“திமுகவை பார்த்துதான் பாஜக பயம்” – திமுக எம்.பி ஆ.ராசா பேட்டி

திமுக எம்.பி ஆ.ராசா சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது

தமிழ்நாடு திராவிட சித்தாந்த பின்னணி கொண்ட மாநிலம். இங்கு பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது. தமிழ்நாடு அமைதி பூங்காவாக உள்ளதை அமித்ஷா விரும்பவில்லை.

மத்திய அரசு நிதி ஒதுக்காதபோது, மாநில அரசு நிதியில் வளர்ச்சி திட்டங்களை மேற்கொண்டு வருகிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின். நேற்று மதுரையில் நடந்த கூட்டத்தில் தனது பதவிக்கு உகந்தவாறு மத்திய அமைச்சர் அமித்ஷா பேசவில்லை. கூட்டாட்சி தத்துவத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியுள்ளார்.

98.5 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். அமித்ஷாவை நான் அழைக்கிறேன். விவாதத்திற்கு நான் தயார்? அமித்ஷா தயாரா? திமுகவிற்கு அச்சப்பட்டுதான், தமிழ்நாட்டுக்கு வந்து அமித்ஷா பேசியுள்ளார். திமுகவை கண்டு பாஜகதான் அஞ்சுகிறது” என்றார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news