தலைநகர் டெல்லியில் வெயில் சுட்டெரித்து வந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில், நேற்று இடியுடன் கூடிய பெய்தது.
பல பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழையும் பெய்தது.
டெல்லி, நொய்டா மற்றும் குர்கான் ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது.
டெல்லியில் வீசிய பலத்த காற்றால் நகரின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மேலும் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மரங்கள் விழுந்ததில், வாகனங்களும் சேதம் அடைந்தன.
டெல்லியில் மழையின் காரணமாக மோசமான வானிலை நிலவியதால் விமானங்கள் தரையிரங்க முடியாமல் சண்டிகர், லக்னோ, ஜெய்ப்பூர், அகமதாபாத், டேராடூன் ஆகிய நகரங்களுக்கு 8 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.
கனமழை மற்றும் சூறைக்காற்றின் காரணமாக டெல்லி மற்றும் சுற்றுவட்டாரத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஜம்முவில் பெய்த கனமழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பல வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
ஜம்மு மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் பெய்த கனமயால் பூர்மண்டல்தேவிகா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டு, ஒன்றன் மீது ஒன்று மோதி உருக்குலைந்தன.