தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் சுமார் 24 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கிய நிலையில், கொரோனா காரணமாக பணிகள் தாமதமானது.
இந்நிலையில், இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நவம்பர் 26ஆம் தேதி நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமான பணிகள் குறித்து ஒவ்வொரு வாரமும் ஆய்வு நடத்திவரும் மத்திய அரசு, வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.