இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 9 ஆயிரத்து 531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிகை 4 கோடியே 43 லட்சத்து 48 ஆயிரத்து 960 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 11 ஆயிரத்து 726 பேர் குணமடைந்ததால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 37 லட்சத்து 23 ஆயிரத்து 944 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு புதிதாக 36 பேர் உயிரிழந்ததால், பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 27 ஆயிரத்து 368 ஆக அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் 97 ஆயிரத்து 648 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது