கொரோனா பரவல் அதிகரிப்பு – முகக்கவசம் அணிவது கட்டாயம்

316

கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது.

அதன்காரணமாக பெங்களூருவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் எனவும் பெங்களூரு சிறப்பு கமிஷனர் ஹரீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதேபோல், மகாராஷ்டிராவிலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது அவசியம் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மக்கள் முகக்கவசம் அணிவதை தவிர்க்காமல் கட்டாயம் அணிந்துகொள்ளவேண்டும் என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு வாரத்தில் 3 மடங்காக அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா 4வது அலை உருவாகலாம் எனவும் அவர் அச்சம் தெரிவித்தார்.