இந்தியாவில் புதிய கொரோனா

370

கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது.

அந்த வகையில் ஒமைக்ரான் வைரசின் துணை வைரசான பிஏ.5, இந்தியாவில் நுழைந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் வசித்து வரும் 29 வயதான வெளிநாடு வாழ் இந்திய தொழில் அதிபருக்கு இந்த தொற்று பாதிப்பு உறுதியானது.

இவர் தனது பெற்றோரைப் பார்ப்பதற்கு குஜராத் மாநிலம், வதோதராவுக்கு வந்தபோது கடந்த 1-ந் தேதி முதலில் கொரோனா தொற்று உறுதியானது.

அதைத் தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

அவரிடம் சேகரிக்கப்பட்ட மாதிரி, காந்தி நகரில் உள்ள மரபணு வரிசைப்படுத்தல் பரிசோதனைக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே கடந்த 10-ந் தேதி நடத்திய பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என நெகட்டிவ் முடிவு வந்ததால், அவர் நியூசிலாந்துக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் அவரது மாதிரிக்கான மரபணு வரிசைப்படுத்தல் முடிவு நேற்று வெளியானது.

அதில்தான் அவருக்கு பிஏ.5 துணை வரைஸ் தாக்கி இருந்தது உறுதிபடுத்தப்பட்டிருந்தது.

தற்போது அவர் எங்கே இருக்கிறார் என தெரிய வில்லை என்று வதோதரா மாநகராட்சி தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் தேவேஷ் படேல் தெரிவித்தார்.

அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அவரது பெற்றோருக்கு தொற்று பாதிப்பு இல்லை.

ஆனால் பிஏ.5 வைரஸ், அதிகளவில் பரவுகிற தன்மையை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.