Today கொரோனா updates…

333
Advertisement

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாவது நாளாக சற்று குறைந்து, ஆயிரத்து 653 ஆக பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் நேற்று ஆயிரத்து 653 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்து 43 ஆயிரத்து 683 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் பாதிப்பு சற்று அதிகரித்து 204  பேரும், கோவையில் 201 பேரும், செங்கல்பட்டில் 101  பேரும், ஈரோட்டில் 139  பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா தொற்றில் இருந்து நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 581 பேர் மீண்ட நிலையில், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 91 ஆயிரத்து 480 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் 16 ஆயிரத்து 893  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 22 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 35 ஆயிரத்து 310 ஆக அதிகரித்துள்ளது.