கொரோனா 3வது அலை எப்போது தாக்கும்..? எய்ம்ஸ் மருத்துவர் அதிர்ச்சி தகவல்..!

434
Advertisement

பண்டிகை காலங்களில் கொரொனா விதிகளை கடைபிடிப்பதை பொறுத்தே கொரோனா 3 வது அலை ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


பண்டிகை காலம் என்பதால், நாட்டுமக்கள் 3 மாதங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில் கொரொனா விதிகளை கடைபிடிப்பதை பொறுத்தே கொரோனா 3-வது அலை அமையும் என தேசிய நோய்த்தடுப்புக்கான தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவின் கொரோனா பணிக்குழு தலைவர் N.K அரோரா தெரிவித்துள்ளார்.

இதேபோல், பெரிய கூட்டங்கள் , கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் நிகழ்வுகள் ஆகியவை தான் கொரோனா 3 வது அலைக்கு காரணமாக இருக்கும் என எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்