தங்களது பொறுமையை சோதித்து பார்க்காதீர்கள் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தீர்ப்பாயங்களின் பணியிடங்களை மத்திய அரசு நிரப்பாமல் இருப்பதற்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா கடும் அதிருப்தியை தெரிவித்தார்.
தீர்ப்பாயங்களை தொடர்ந்து நடத்த விருப்பம் இல்லாவிடில், அனைத்து தீர்ப்பாயங்களையும் மூடிவிடுங்கள் என்றும் அதுதொடர்பான சட்டங்களை ரத்து செய்து விடுங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள், உத்தரவுகளை மத்திய அரசு மதிப்பதே இல்லை என்றும் மத்திய அரசு தங்களது பொறுமையை மிகவும் சோதித்துப் பார்க்கிறது எனவும் தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.