Wednesday, January 21, 2026

த.வெ.க தலைவர் விஜய் பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்?

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்,’உங்க விஜய் நான் வரேன், மக்கள் சந்திப்பு பிரசாரம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை கடந்த 13-ந்தேதி முதல் தொடங்கி உள்ளார்.

முதற்கட்ட சுற்றுப்பயணம் திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் இருந்து தொடங்கியது.இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று அவர் பிரசாரம் செய்ய உள்ளார். இந்த பிரசாரம் பெரும்பாலும், சனிக்கிழமை நாட்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.2-கட்ட பிரசாரத்தை நாகையில் விஜய் {செப் 20}மேற்கொண்டார்.

அடுத்ததாக வரும் 27ம் தேதி சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த த.வெ.க தலைவர் விஜயின் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அதாவது, வரும் 27ம் தேதி சேலத்திற்கு பதில் கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related News

Latest News