வருங்கால கணவருக்காக வைரலாகிய மணப்பெண் !

28
Advertisement

ஆண் ஒருவர் தனக்கு  பிடித்த பெண்ணிடம் காதலை வெளிடுத்துவது இயல்பு தான்.அதேவேளையில் அந்த காதலை எப்படி வெளிப்படுத்துகிறார் எனபது தான் சுவாரசியமான ஒன்று.

மக்கள் அதிகம் கூடும்  இடங்களில் , விழாக்களில் போன்ற மகிழ்ச்சி நிரம்பிய தருணங்களில் தன் காதலை வெளிப்படுத்துவது தான் எப்போது எல்லாம் ட்ரெண்ட்.அது போன்ற பல ரசிக்கும்படியான வீடியோகளை நாம் இணையத்தில் கண்டிருப்போம்.

இங்கும் அதுபோன்று தான் ஒரு அழகான காதல் வெளிப்படுகிறது.இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் பெண் ஒருவர் , அழகான மணப்பெண் உடையில் தான் மணக்கவிருக்கும் மணமகனிடம் தன் காதலை வெளிப்படுத்தும் விதம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

Advertisement

ஷாருக்கான் நடித்த திரைப்பட பாணியில், முன்பக்க காரின் மேலே அமர்ந்து ஷாருக்கான் போன்று பாடலை பாடி தன் காதலை மணமகனுக்கு வெளிப்படுத்துகிறார்.

பாரம்பரிய உடையில் மணமகள் மணமகனுக்கு முன்மொழியும் விதம் பாட்டின் மூலம்  காதலை வெளிப்படுத்திய இந்த பெணின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.