Friday, March 21, 2025

த.வெ.க விழாவில் செய்தியாளரை பவுன்சர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இன்று 2ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2ம் ஆண்டு தொடக்க விழா சென்னை மாமல்லபுரம் அருகே நடைபெற்று வருகிறது. இதில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரை பவுன்சர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக அந்த செய்தியாளரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Latest news