B-737 மேக்ஸ் ரக விமான சேவை தொடக்கம்

321
Advertisement

இரண்டரை ஆண்டுகள் தடைக்கு பின் மீண்டும் B-737 மேக்ஸ் ரக விமான சேவையை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தொடங்க உள்ளது. பயணிகள் விமான போக்குவரத்து துறை இயக்குநர் இதற்கான அனுமதியை அளித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட போயிங்க் 737 ரக விமானம் ஜாவா கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது.

2019ஆம் ஆண்டு அதே ரக விமானம் எத்தியோப்பியாவில் விபத்துக்குள்ளானது. இந்த 2 விமான விபத்துக்களிலும் மொத்தம் 346 பேர் உயிரிழந்தனர்.

விசாரணையில் இந்த ரக விமானங்களில் உள்ள எந்திர கோளாறுகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளில் உள்ள குறைபாடுகள் காரணமாக விபத்துகள் நடைபெற்றது தெரியவந்தது.

இதனால் இந்த ரக விமான சேவைக்கு தடை விதிக்க பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த விமானங்களின் மீதிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து இந்த விமான சேவை மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இரண்டரை ஆண்டுகள் தடைக்கு பின் மீண்டும் B-737 மேக்ஸ் ரக விமான சேவையை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தொடங்க உள்ளது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் மொத்தம் 13 போயிங்க் மேக்ஸ் ரக விமானங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.