Sunday, December 7, 2025

விழுப்புரத்தில் மணல் கடத்தியவனை பிடிக்க முயன்ற எஸ்ஐ மீது தாக்குதல்

விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் கரையோர கிராமங்களில் மணல் கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதால் போலீசார், தொடர்ந்து கடற்கரையோர கிராமங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

கடந்த மாதம் மணல் கடத்தலில் ஈடுபட்ட சுதாகர் என்பவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், சுதாகர் தென் பெண்ணையாற்றின் கரையோர பகுதியில் உலவி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து எஸ்ஐ குணசேகரன் சுதாகரை பிடிக்க முயன்றார். அப்போது சுதாகர், எஸ்ஐ குணசேகரனை மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதம் கொண்டு சரமாரியாகி தாக்கவிட்டு தப்பி சென்றுள்ளார். இதையடுத்து எஸ்ஐ குணசேகரன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுதாகரை பிடிக்க மாவட்ட எஸ்பி சரவணன், 2 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். தனிப்படையினர் தப்பியோடிய சுதாகரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News