கனமழையில் மூழ்கிப்போன ரயில்வே தண்டவாளங்கள்

420
Advertisement

அசாம் மாநிலத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது.

கனமழையால் அங்குள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

27 மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.7  லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மழையால் சாலைகள், பாலங்கள்,  அடித்துச்செல்லப்பட்டன. ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. ஹாப்லாங் ரயில் நிலையம் இடிபாடுகளில் புதைத்து கிடைக்கிறது.

இந்நிலையில், டிமா ஹாசாவ் மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட ரயில் நிலையத்தை மீண்டும் சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் பணியில் ராணுவம், துணை ராணுவ படைகள், அசாம் பேரிடர் மீட்பு படையினர் மேலும் ரயில் தண்டவாளங்கள், பாலங்கள், மற்றும் சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், திரிபுரா மாவட்டத்திலும் கனமழை பெய்ததால், நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. 

அகர்தாலாவில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதற்கிடையே, வெள்ளம் பாதித்த பகுதிகளை அம்மாநில முதலமைச்சர் மாணிக் சாஹா நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.