தருமபுரி அருகே, எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் தீடீரென  தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

177
Advertisement

தருமபுரி மாவட்டம், சாமிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் விஜயராகவன்.

இவர் தொப்பூருக்கு  தனது எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு உள்ள ATM-ல் முன்பு, எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தில் நிறுத்தி விட்டு, ATM-ல் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது  சாலையில் நிறுத்தப்பட்டிருந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் திடீரென தீ பற்றி எரிந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து  தீயை அணைத்தனர்.