Saturday, March 15, 2025

திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் காலம் நெருங்கிவிட்டது – அமித்ஷா பேச்சு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று நாள் பயணமாக கோவை வந்துள்ளார். பாஜக சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பாஜக தொண்டர்களில் மத்தியில் அமித் ஷா உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் : பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகவும் அற்புதமான பட்ஜெட்டை தந்திருக்கிறார். 2025-ம் ஆண்டு டெல்லி வெற்றி பெற்றது போல் தமிழ்நாட்டிலும் 2026-ம் ஆண்டு பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெறும்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீரழிந்து காணப்படுகிறது. பெண்கள், சகோதரிகள் பாதுகாப்போடு சென்று வரும் சூழ்நிலை இல்லாதது மிகவும் மோசமான முன்உதாரணம்.

மத்திய அரசு நலத்திட்டங்களுக்கான ஏராளமாக நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துவிட்டது என முதலமைச்சர் கூறுவதில் உண்மையில்லை இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Latest news