அதிமுக-பாஜக இடையே தற்போது மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சர் பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைப்பது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. ஆனால், சரியான நேரம் வரும்போது அதுபற்றி அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.