சேலம் ஆத்தூரில் அதிமுகபொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது : அதிமுகவை பலர் முடிக்க பார்த்தார்கள். முடக்க பார்த்தார்கள், ஆனால் முடியவில்லை. அதிமுக வலுப்பெற்று இருக்கிறது. திமுக தேய்கிறது. அதிமுகவில் மட்டும்தான் சாதாரண தொண்டன் உச்சபட்ச அதிகாரத்திற்கு வர முடியும்.
யார், யாருடன் கூட்டணி என்பதெல்லாம் 6 மாதத்தில் தெரியும், அதை மறைக்க முடியாது. பாஜகவுடன் கூட்டணி பேச்சா என்ற கேள்விக்கு 6 மாதம் கழித்து வந்து கேளுங்கள் என அவர் பதில் அளித்தார்.