அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும், அக்னி-4 ஏவுகணை நேற்று சோதனை செய்யப்பபட்டது.
ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவப்பட்ட அக்னி-4 ஏவுகணை துல்லியமாக இலக்கை தாக்கியது.
அக்னி-4 ஏவுகணை, ஒரு டன் அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று 4 ஆயிரம் கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கு திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னி-4 ஏவுகணையின் வெற்றி, இந்திய ராணுவத் திறனை மேலும் வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.