Monday, January 26, 2026

“நானும் சிறுநீர் குடித்தேன், அது அமிர்தம்” – பிரபல பாலிவுட் நடிகை கருத்து

பிரபல பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல், தனது காலில் ஏற்பட்ட காயம் குணமாவதற்கு தனது சிறுநீரை குடித்ததாக கூறினார். இது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.

பரேஷ் ராவலை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகை அனு அகர்வாலும் சிறுநீரை குடித்ததாக கூறி இருக்கிறார். இது தற்போது பேசு பொருளாகி உள்ளது.

இதுகுறித்து அவர் கூறியதாவது : ‘சொந்த சிறுநீரை குடிப்பது யோகாவில் ஒரு பயிற்சி. நாம் முழு சிறுநீரையும் குடித்துவிட கூடாது. ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே குடிக்க வேண்டும். அது அமிர்தம். இது சருமத்தை சுருக்கமில்லாமல் வைத்திருக்க உதவும். ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் இது உதவும். அதன் நன்மைகளை நான் அனுபவித்திருக்கிறேன்” என்றார்.

Related News

Latest News