Thursday, March 27, 2025

“நடிகை செளந்தர்யா விபத்தில் சாகவில்லை, அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்” – வெளியான ஷாக் தகவல்

தமிழ் சினிமாவில் காதலா காதலா, படையப்பா, தவசி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை செளந்தர்யா. இவர் கடந்த 2004ம் ஆண்டில் பெங்களூர் சென்ற போது ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தார். சௌந்தர்யா உயிரிழந்த போது அவர் கர்ப்பமாக இருந்தார் என கூறப்படுகிறது.lஇந்த விபத்தில் அவரது சகோதரரும் உயிரிழந்தார்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்தவர் சிட்டிமல்லு. இவர் தனது புகாரில், “நடிகை சவுந்தர்யாவின் மரணம் விபத்தால் நடந்தது இல்லை, அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

நடிகர் மோகன் பாபுவுக்கும் சௌந்தர்யாவுக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. அதாவது ஜல்பள்ளி கிராமத்தில் சௌந்தர்யாவுக்கும் அவரது சகோதரர் அமர்நாத்துக்கும் சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தை நடிகர் மோகன் பாபு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர்கள் இருவரும் தர மறுத்துள்ளார்கள். இதனால் ஏற்பட்ட பிரச்னை ஏற்பட்டுள்ளது. விமான விபத்தில் இருவரும் மறைந்த பின்னர், மோகன் பாபு அந்த இடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளார் என கூறப்படுகிறது.

எனவே இந்த நிலத்தை மீட்டு ஆதரவற்றோர், ராணுவத்தினர், போலீஸார் ஆகியோரின் நலனுக்கு வழங்க வேண்டும் என தனது புகாரில் சிட்டிமல்லு குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இந்த நில அபகரிப்பு விவகாரத்தில் மோகன் பாபுவை அழைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Latest news