அனிருத் – காவ்யா திருமண வரவேற்பு… முதல்வர் விஜய்யின் மாஸ் என்ட்ரி … அவர் உடையின் விலை தெரியுமா?

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் நெட்வொர்க் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் கிரீஸில் நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில், சென்னையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்ற புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, அவர் அணிந்து வந்த ஆடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விஜய் இந்த நிகழ்ச்சிக்கு நேவி ப்ளூ நிற கோட் சூட் மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்து வந்திருந்தார். கோட்டில் பதிக்கப்பட்டிருந்த தங்க நிற பட்டன்கள், பட்டு பாக்கெட் ஸ்கொயர் மற்றும் காலர் அருகே இருந்த மெரூன் நிற பட்டை ஆகியவை அவரது தோற்றத்திற்கு ராயல் லுக்கைக் கொடுத்தன.

பிரபல செய்தித்தாள் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, விஜய் அணிந்திருந்த கோட் சூட்டின் விலை ரூ.2.30 லட்சம். பட்டு பாக்கெட் ஸ்கொயரின் விலை ரூ.7,500 என்றும், பிரத்யேக தங்க நிற பட்டன்களின் விலை ரூ.1.47 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவர் அணிந்திருந்த ஆடையின் மொத்த மதிப்பு சுமார் ரூ.3.67 லட்சம் ஆகும். இதற்கு முன்பு நடிகர் ஷாருக்கான், ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த பத்மநாப் சிங் உள்ளிட்டோரும் இதேபோன்ற ராயல் லுக் ஆடைகளை அணிந்துள்ளனர். தற்போது விஜய்யின் ஆடைதான் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Related News

Latest News