EPFO ஓய்வூதியதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட்! நவம்பர் 19-ல் காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்?

நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இபிஎஃப்ஓ பென்ஷன்தாரர்களின் நீண்ட கால கனவு, அடுத்த மாதம் நனவாகப் போகிறது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனமான இபிஎஃப்ஓ, தற்போதைய குறைந்தபட்ச பென்ஷன் தொகையான ஆயிரம் ரூபாயை, ஏழாயிரத்து ஐநூறு ரூபாயாக அதிரடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான மிக முக்கியமான முடிவு, நவம்பர் பத்தொன்பதாம் தேதி குஜராத்தில் உள்ள கிர் பகுதியில் நடைபெற உள்ள இபிஎஃப்ஓ மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த இரண்டாயிரத்தி பதினான்காம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தான், அரசு குறைந்தபட்ச பென்ஷனை ஆயிரம் ரூபாயாக நிர்ணயித்தது.

ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில் விலைவாசி பலமடங்கு உயர்ந்துள்ள நிலையில், இன்றைய காலகட்டத்தில் வெறும் ஆயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு மருத்துவச் செலவுகளைக் கூட சமாளிக்க முடியாது என்பதால், அகவிலைப்படியுடன் சேர்த்து பென்ஷனை ஏழாயிரத்து ஐநூறு ரூபாயாக உயர்த்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் நீண்டகாலமாகப் போராடி வருகின்றன.

சமீபத்தில் இபிஎஃப்ஓ ஊழியர்களின் சம்பள உச்சவரம்பை பதினைந்தாயிரத்தில் இருந்து இருபத்தி ஐந்தாயிரமாக அரசு உயர்த்தியுள்ளதால், இந்த முறை பென்ஷன் உயர்வும் உறுதியாகக் கிடைக்கும் என பலரும் நம்புகின்றனர்.

அதுமட்டுமின்றி, இபிஎஃப்ஓ அமைப்பில் உள்ள ஏழு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களுக்கு இன்னொரு சூப்பரான நற்செய்தியும் காத்திருக்கிறது. இனி உங்களது பிஎஃப் பணத்தை எடுக்க எந்தவித அலைச்சலும் தேவையில்லை.

நீங்கள் சாதாரண கடைகளில் யுபிஐ மூலம் ஸ்கேன் செய்து பணம் அனுப்புவது போல, உங்களது பிஎஃப் கணக்கில் இருந்து எளிதாக உங்கள் வங்கி கணக்கிற்கு யுபிஐ மூலமாகவே பணத்தை எடுக்கும் புதிய வசதியை அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

தற்போது இதற்கான தீவிர சோதனைகள் வங்கிகளுடன் இணைந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த வசதி அதிகாரப்பூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என நம்பத்தகுந்த அரசு வட்டாரங்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளன.

Related News

Latest News