சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களுடன் காணப்படுகிறது. கடந்த அக்டோபர் 1-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,09,440-க்கு விற்பனையானது. அக்டோபர் 2-ந்தேதி சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.1,10,200-ஆக விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 3-ந்தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,675-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,09,400-க்கும் விற்பனையானது. 4 மற்றும் 5-ந்தேதிகளில் விலையில் மாற்றம் இல்லை.
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,09,280-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.13,660-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,09,680-க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,710-க்கும் விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2.45 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
