ஒரு கிராம் தங்க மோதிரம்… யார் யாருக்கு கிடைக்கும்? முழு விவரம் இதோ!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழர் பாரம்பரியத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ள “தாய் மாமன் சீர்” மரபை பிரதிபலிக்கும் வகையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

“தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்” என அழைக்கப்படும் இத்திட்டம், முதல்வர் விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 முதல் பிறக்கும் குழந்தைகளை உள்ளடக்கும் வகையில் அறிவிக்கப்பட்டது. பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று திட்டம் தொடங்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதல்வரின் வெளிநாட்டு பயணம் காரணமாக தொடக்க விழா ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 22 காரட் ஹால்மார்க் தரத்திலான ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். முதற்கட்டமாக 89,955 மோதிரங்களை ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது.

இத்திட்டத்திற்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை, முகவரிச் சான்று அல்லது பிறப்பிடச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் வசிப்பவர்கள், அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள், PICME-யில் RCH ID உடன் பதிவு செய்தவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்கள் தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News