ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…

செல்போன் ரீசார்ஜ் திட்டங்களில் புதிய விதிமுறைகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களின் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் இதன் மூலம் பயன்பெற வாய்ப்புள்ளது.

தற்போது பல ரீசார்ஜ் திட்டங்கள் 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் உள்ளதால், ஒரு ஆண்டில் 12 முறைக்கு பதிலாக 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் கூடுதல் செலவு ஏற்படுகிறது.

புதிய மாற்றங்களின்படி, இணைய வசதி தேவையில்லாத வாடிக்கையாளர்களுக்காக குறைந்த கட்டணத்தில் குரல் அழைப்பு மற்றும் SMS சேவைகள் மட்டும் கொண்ட திட்டங்களை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொகுப்புத் திட்டங்களின் காலத்தை 28 நாட்களுக்கு பதிலாக 30 நாட்களாக வழங்குவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உதாரணமாக, ரூ.299 திட்டத்தை 28 நாட்களுக்கு பயன்படுத்தினால் ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். 30 நாள் திட்டம் வழங்கப்பட்டால் ஆண்டுக்கு 12 முறை மட்டுமே ரீசார்ஜ் செய்தால் போதும். இதன் மூலம் சுமார் ரூ.300 வரை செலவு குறைய வாய்ப்புள்ளது. இந்த மாற்றங்கள் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நன்மையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News