பாதரசத்தை ‘தங்கமாக’ மாற்றிய அதிசயம்! இனி தங்கம் விலை என்னவாகும்?

தங்கம் விலை நாளுக்கு நாள் விண்ணை முட்டி வரும் நிலையில், இனி தங்கம் விலை அதலபாதாளத்திற்கு செல்லுமா என்ற மிகப்பெரிய கேள்வி தற்போது எழுந்துள்ளது.

காரணம், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் பாதரசத்தை (Mercury) உண்மையான தங்கமாக மாற்றி உலகையே அதிரவைத்துள்ளது. சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ‘மராத்தான் பியூஷன்’ (Marathon Fusion) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் தான் இந்த அறிவியல் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளது.

கடந்த இரண்டாயிரத்தி இருபத்தி ஐந்தாம் ஆண்டு, ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனமான ‘செர்ன்’ (CERN), ஈயத்தை தங்கமாக மாற்றி ஒரு மாபெரும் சாதனையை படைத்திருந்தது.

ஆனால், தற்போது அந்தச் சாதனையை விட பத்து மடங்கு அதிக வேகத்தில் தங்கம் தயாரித்து இந்த நிறுவனம் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது.

இதற்காக இவர்கள் ‘நியூக்ளியர் டிரான்ஸ்மியூட்டேஷன்’ (Nuclear Transmutation) எனப்படும் அதிரடியான அணுக்கரு மாற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

சாதாரண வேதியியல் மாற்றங்கள் (Chemical Reactions) போல இல்லாமல், ஒரு அணுவின் மையக்கருவையே (Atom’s Nucleus) மாற்றி புதிய தனிமத்தை உருவாக்கும் முறைதான் இது.

இந்த தொழில்நுட்பத்தில், டியூட்டிரியம்-டிரிடியம் இணைவு (Deuterium-Tritium Fusion) மூலம் உருவாகும் அதிக ஆற்றல் கொண்ட நியூட்ரான்களைப் பயன்படுத்தி, இயற்கையான பாதரசமான மெர்குரி-198 ஐ [Mercury-198], கதிரியக்கத் தன்மை கொண்ட மெர்குரி-197 ஆக (Radioactive Mercury-197) மாற்றுகின்றனர்.

பின்னர், அது படிப்படியாகச் சிதைவடைந்து தூய்மையான மற்றும் உறுதியான கோல்டு-197 ஆக (Stable Gold-197), அதாவது உண்மையான தங்கமாக மாறுகிறது.

இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புற்றுநோய் சிகிச்சைக்கும் பயன்படும் காப்பர்-64 (Copper-64) போன்ற கதிரியக்க ஐசோடோப்புகளையும் (Radioactive Isotopes) உருவாக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தங்கம் தயாரிக்கும் முறையை ஒரு பிரம்மாண்டமான அணு உலை (Fusion Reactor) மூலம் செய்தால், ஒரு கிகாவாட் (Gigawatt) மின்சாரம் உற்பத்தியாகும் ஒரு வருடத்தில், தோராயமாக இரண்டு டன் வரை தங்கத்தை மிக எளிதாக உற்பத்தி செய்ய முடியும் என இந்த நிறுவனம் கணித்துள்ளது.

இருப்பினும், இந்தத் தொழில்நுட்பம் தற்போது ஒரு பரிசோதனை அளவில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதை பெரிய அளவிலான வணிக ரீதியான தொழிற்சாலைகளில் (Commercial Scale) உற்பத்தி செய்ய இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்றாலும், தற்போதைய நவீன அறிவியல் இந்த அசாத்தியத்தை சாத்தியமாக்கியுள்ளது மனித குலத்தின் மிகப்பெரிய அறிவியல் மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Related News

Latest News