டாஸ்மாக் கடைகளில் இனி இந்த சரக்குகள் கிடைக்காது! காரணம் என்ன?

தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், தினமும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டப்படுவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, மதுபானங்களில் கலப்படம் மற்றும் தரம் குறித்த புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI சார்பில் மதுபான தொழிற்சாலைகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் FSSAI அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில், அந்த நிறுவனத்தால் தயாரிக்கப்படும் குறிப்பிட்ட 11 வகையான மதுபானங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கே. நந்தகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்கள், கிடங்கு மேலாளர்கள் ஆகியோர் மறு அறிவிப்பு வரும் வரை குறிப்பிட்ட 11 பிராண்டுகளின் பரிமாற்றம் மற்றும் சில்லறை விற்பனையை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் FL2 மற்றும் FL3 உரிமதாரர்களுக்கும் இந்த மதுபானங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பட்டியலில் விஎஸ்ஓபி எக்ஷா கோல்ட் பிராந்தி, லூயிஸ் வெர்னன்ட் XO, மெக்டொவல்ஸ் VSOP, நம்பர் 1 மெக்டொவல்ஸ் ஃபைன், மென்ஸ்கிளப் டீலக்ஸ், ஹனி பீ ஃபைன் உள்ளிட்ட பிராண்டுகள் இடம்பெற்றுள்ளன.

FSSAI ஆய்வில், இயற்கை சுவைக்கு பதிலாக செயற்கை சுவையூட்டும் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News