தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா?

தொடர்ந்து 3 நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று திடீரென சரிந்துள்ளது. இதனால் நகை வாங்க காத்திருந்தவர்களுக்கு சற்று ஆறுதல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு ரூ.180 குறைந்துள்ள நிலையில், ஒரு சவரனுக்கு ரூ.1,440 சரிந்து ரூ.1,12,320-க்கு விற்பனையாகிறது.

கடந்த திங்கள் அன்று தங்கம் விலை குறைந்திருந்தது. அதன்பிறகு செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாட்களிலும் தொடர்ந்து விலை உயர்ந்தது.

அந்த மூன்று நாட்களில் ஒரு கிராம் தங்கம் ரூ.270 வரையும், ஒரு சவரன் ரூ.2,000-க்கும் அதிகமாகவும் உயர்ந்தது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது.

24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,317-க்கும், 10 கிராம் ரூ.1,53,170-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.11,820-க்கும், ஒரு சவரன் ரூ.94,560-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை மாற்றங்களின் தாக்கமே இந்திய தங்கம், வெள்ளி விலை ஏற்ற இறக்கங்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

Related News

Latest News