BSNL கொடுத்த சூப்பர் அப்டேட்!! இதோ முழு விவரம்…

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வரும் நிலையில், அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனம் 4G சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்தி வருகிறது. நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் 4G டவர்களை அமைக்கும் திட்டத்தில் BSNL தற்போது 98.6 சதவீத பணிகளை நிறைவு செய்துள்ளது.

2026 ஜூலை 31ஆம் தேதி நிலவரப்படி, 98,557 4G டவர்கள் நிறுவப்பட்டுள்ளன. இதில் 97,213 டவர்கள் ஏற்கனவே செயல்பாட்டுக்கு வந்துவிட்டதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த டவர்கள் அனைத்தும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன.

மாநில வாரியாக பார்க்கும்போது, தமிழ்நாட்டில் 7,323 4G டவர்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. கேரளாவில் 6,886 டவர்களும், உத்தரப் பிரதேசத்தில் 6,920 டவர்களும், ஆந்திரப் பிரதேசத்தில் 6,098 டவர்களும், ராஜஸ்தானில் 5,665 டவர்களும் நிறுவப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் திட்டமிடப்பட்ட 9,890 டவர்களில் 9,725 டவர்கள் அமைக்கப்பட்டு, 9,545 டவர்கள் செயல்பாட்டில் உள்ளன.

BSNL-ஐ வலுப்படுத்த அரசு ரூ.3.18 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. 4G சேவை விரிவாக்கத்திற்காக மட்டும் ரூ.6,982 கோடி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் வாடிக்கையாளர்களை மீண்டும் அதிகரிக்க BSNL எதிர்பார்க்கிறது.

எனினும், நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 11.37 கோடியிலிருந்து 2026ஆம் ஆண்டில் 9.29 கோடியாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் வருவாய் ரூ.19,053 கோடியிலிருந்து ரூ.25,049 கோடியாக உயர்ந்துள்ளது.

Related News

Latest News