‘வெட்கக்கேடான செயல்’! பாகிஸ்தானை கிழித்து தொங்கவிட்ட இந்தியா !

மத்திய ஆசியப் பிராந்தியத்தில் போர் பதற்றம் இப்போது புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் ராணுவம் நடத்தியுள்ள வான்வழித் தாக்குதல்கள், சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை “வெட்கக்கேடான அத்துமீறல்” என்று இந்தியா மிகக் கடுமையாகச் சாடியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் இறையாண்மையைப் பாகிஸ்தான் குலைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இது பிராந்திய அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தல் என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. பாகிஸ்தானின் இந்தப் பொறுப்பற்ற செயல், அதன் உள்நாட்டுத் தோல்விகளை மறைக்க அண்டை நாட்டின் மீது வன்முறையைத் திணிக்கும் ஒரு முயற்சியே என்றும் இந்தியா விமர்சித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள மூன்று மாகாணங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட சுமார் 36 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 160-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் காபூலில் உள்ள தாலிபான் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் தரப்போ கராச்சியில் நடந்த தாக்குதலுக்குக் காரணமான 29 பயங்கரவாதிகளை மட்டுமே தாங்கள் கொன்றுள்ளதாகக் கூறி வருகிறது.

உயிரிழந்தவர்கள் அனைவரும் அப்பாவிப் பொதுமக்கள் என்றும், அவர்கள் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்தப் பயங்கரமான குண்டுவீச்சு நடந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் நெஞ்சை உருக்குவதாக உள்ளன. தங்களது குழந்தைகளின் அலறல் சத்தமும், பெற்றோரின் கதறலும் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இந்தத் தாக்குதலில் மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், பாகிஸ்தான் ராணுவம் “டபுள்-டாப்” (Double-Tap) என்ற கொடூரமான தாக்குதல் முறையைப் பயன்படுத்தியுள்ளது. அதாவது, ஒரு இடத்தில் குண்டு வீசப்பட்ட பிறகு, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க பொதுமக்கள் ஓடி வரும்போது, அதே இடத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் குண்டு வீசப்பட்டுள்ளது.

இதன் மூலம் காயமடைந்தவர்களைக் காப்பாற்ற வந்த மீட்புப் பணியாளர்களையும் பாகிஸ்தான் கொன்று குவித்துள்ளது. இத்தகைய மனிதாபிமானமற்ற செயலை “யுத்தக் குற்றம்” என்று ஆப்கான் அரசு சாடியுள்ளது. பாகிஸ்தானின் இந்தச் செயல் எல்லைப் பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களின் பாதுகாப்பை முற்றிலுமாகச் சிதைத்துள்ளது.

2021-ல் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான உறவு ஏற்கனவே மோசமடைந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் ஒரு முழு அளவிலான போருக்கு வித்திடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. உயிரிழந்த குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள இந்தியா, ஆப்கானிஸ்தானின் ஒருமைப்பாட்டிற்கும் அதன் எல்லைப் பாதுகாப்பிற்கும் எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று உறுதி அளித்துள்ளது.

அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவைப் பேணத் தவறி, எல்லை தாண்டிய வன்முறையில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருவது சர்வதேச அரங்கில் அந்த நாட்டிற்கு மீண்டும் ஒருமுறை பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News