Gold ETF என்பது நேரடியாக தங்க நகைகள் அல்லது பார்களை வாங்காமல், டிஜிட்டல் வடிவில் தங்கத்தில் முதலீடு செய்யும் திட்டமாகும். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மூலம் நாம் முதலீடு செய்யும் பணத்துக்கு ஏற்ப அவர்கள் உண்மையான தங்கத்தை வாங்கி பாதுகாக்கின்றன.இந்நிலையில் HDFC, ICICI Prudential, Nippon India உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் Gold ETF திட்டங்களில் ஒரே நேரத்தில் பெரிய அளவிலான முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்த நடவடிக்கை நாட்டின் பொருளாதார நிலையை உறுதிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
HDFC மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்க ETF திட்டங்களில் ஒரே முறையில் ரூ.25 கோடிக்கு மேல் புதிய முதலீடுகளுக்கு தடை விதித்துள்ளன. இந்த வரம்புக்கு மேல் உள்ள முதலீடுகளுக்கு சில நிபந்தனைகள் அல்லது அனுமதி தேவைப்படலாம். இது பெரிய நிறுவனங்கள் மற்றும் உயர் நிதி முதலீட்டாளர்களை மையப்படுத்திய நடவடிக்கையாகும்.இந்த கட்டுப்பாடு ரூ.25 கோடிக்கு மேல் முதலீடு செய்பவர்களை மட்டுமே பாதிக்கும்.
மேலும் இந்த கட்டுப்பாடு சாதாரண நடுத்தர வர்க்க மக்களின் மாதாந்திர SIP முதலீடுகளுக்கு பொருந்தாது.. சாதாரண முதலீட்டாளர்கள் பயமின்றி தங்கள் திட்டங்களைத் தொடரலாம்.இந்த நடவடிக்கை நாட்டின் வெளிநாட்டு செலவினங்களைக் கட்டுப்படுத்தவும், ரூபாயின் மதிப்பை வலுப்படுத்தவும் உதவும். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுவதை இது காட்டுகிறது.இந்த மாற்றம் பொருளாதார நிலையை உறுதிப்படுத்த உதவும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
