சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் பல்வேறு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.
கடந்த சில நாட்களாக விலையில் மாற்றம் பதிவாகி வரும் நிலையில், சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.13,150-க்கும், ஒரு சவரன் ரூ.120 உயர்ந்து ரூ.1,05,200-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலையில் மீண்டும் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.1,05,760-ஆகவும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,220-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதிகரித்து ரூ.240-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் உயர்வு நகை வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது.
