20.07.2026; வார தொடக்கத்திலேயே அதிரடி… இன்றைய தங்கத்தின் விலை என்ன தெரியுமா?

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலைமை மற்றும் பல்வேறு நாடுகளுக்கிடையிலான போர் பதற்றம் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தினசரி மாற்றங்கள் பதிவாகி வருகின்றன. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.35 உயர்ந்து ரூ.13,135 ஆகவும், ஒரு சவரன் ரூ.280 உயர்ந்து ரூ.1,05,080 ஆகவும் விற்பனையானது. நேற்று விடுமுறை என்பதால் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில், வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 அதிகரித்து ரூ.13,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து ரூ.1,05,200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்படும் இந்த மாற்றங்கள் நகை வாங்கத் திட்டமிடுபவர்களும் முதலீட்டாளர்களும் கவனித்து வரும் முக்கிய அம்சமாக உள்ளன.

சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப வரும் நாட்களிலும் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் தொடரும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related News

Latest News