வங்கி கடன் செட்டில்மென்ட்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி

வங்கி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிப்பவர்களுக்கு உச்ச நீதிமன்றம் தற்போது மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. வங்கியும் கடன் வாங்கியவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்துவிட்டால், அதன் பிறகு சம்பந்தப்பட்ட நபர் மீது கிரிமினல் வழக்குகளைத் தொடரக்கூடாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் ஒரு தொழிலதிபர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்தபோது,சம்பந்தப்பட்ட தொழிலதிபர் 6.49 கோடி ரூபாய் கடனுக்கு வட்டியுடன் சேர்த்து 4.25 கோடி ரூபாயைச் செலுத்தியுள்ளார். வங்கியுடன் முறையான ஒப்பந்தம் செய்யப்பட்டு கணக்கு முடிக்கப்பட்ட பிறகு, அவர் மீது கிரிமினல் வழக்கை நடத்துவது மிகப்பெரிய அநீதி என்றும்,அதற்குப் பின்னும் வழக்கை நீட்டிப்பது அவசியமற்றது.என கூறியுள்ளது.மேலும் அதனை கிரிமினல் குற்றமாகப் பார்க்கத் தேவையில்லை என்பதையும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த தீர்ப்பு மூலம் வங்கி கடனை நேர்மையாக அடைக்க நினைப்பவர்களுக்கு இருந்த மிகப்பெரிய சட்டச் சிக்கல் நீங்கியுள்ளது. கடன் தொகையை ஒருமுறை செட்டில்மென்ட் செய்த பிறகு, நீதிமன்ற வாசலில் ஏறி இறங்க வேண்டிய அவசியம் இனி யாருக்கும் ஏற்படாது.கடனை திருப்பிச் செலுத்திய பிறகும் ஏற்படும் சட்டரீதியான அச்சுறுத்தல்களில் இருந்து இந்தத் தீர்ப்பு சாமானியர்களுக்குப் பெரும் பாதுகாப்பினை வழங்கும். இதன் மூலம் வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான உறவு மேம்படும்.

Related News

Latest News