திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பிறகு, தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான சி. ஜோசப் விஜய் திருச்சிக்கு முதல் முறையாக அரசுமுறைப் பயணமாக வந்தார்.பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் குறித்து மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். “திருச்சி கிழக்கு தொகுதி மக்களின் அன்பை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். ராஜினாமா செய்தாலும் இந்தத் தொகுதியை நான் கைவிடப் போவதில்லை. உங்களுக்குச் சேவை செய்ய, உங்கள் மண்ணின் மைந்தன் ஒருவரே தவெக சார்பில் வேட்பாளராகக் களமிறங்குவார் என்று அதிரடியாக அறிவித்தார்.
விஜய்யின் இந்த ‘மண்ணின் மைந்தன்’ அறிவிப்புக்கு பின்பு முன்னாள் அமைச்சரும், திருச்சி அரசியலின் மூத்த தலைவருமான கு. பா. கிருஷ்ணனின் மகன் க. சிரஞ்சீவி முதல்வர் விஜய்யின் மேடையில் திடீர் அறிமுகம் செய்யப்பட்டார். அப்போது சிரஞ்சீவி , முதல்வர் விஜய்க்கு பிரம்மாண்டமான வெள்ளிக் கோல் ஒன்றை கௌரவமாக வழங்கினார். இந்த நிகழ்வு திருச்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் மத்தியில் விஜய்க்கு நல்ல வரவேற்பு இருப்பதால், உள்ளூர் செல்வாக்கு மிக்க சிரஞ்சீவி போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் என தவெக தரப்பு நம்பிக்கை தெரிவிக்கிறது
