பக்ரீத் நாளில் வந்த குட் நியூஸ்.. சர்ரென குறைந்த தங்கம் விலை..

பக்ரீத் திருநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் சரிவு பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. திங்கட்கிழமை சிறிய அளவில் உயர்ந்திருந்த நிலையில், செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய மூன்று நாட்களிலும் விலை தொடர்ந்து சரிந்துள்ளது.

சென்னையில் கடந்த 25ஆம் தேதி 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.14,780 ஆக இருந்தது. அதன் பின்னர் செவ்வாய்க்கிழமை ரூ.50 குறைந்தது. புதன்கிழமை மேலும் ரூ.80 குறைந்து, நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.14,650 ஆக விற்பனையானது. இன்று அதிலும் பெரிய அளவில் சரிவு ஏற்பட்டு, கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.14,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரே நாளில் ஒரு சவரனுக்கு சுமார் ரூ.1,200 வரை விலை குறைந்துள்ளது.

மொத்தமாக மூன்று நாட்களில் மட்டும் ஒரு கிராமுக்கு ரூ.280 மற்றும் ஒரு சவரனுக்கு ரூ.2,240 வரை தங்க விலை சரிந்துள்ளது. தற்போது ஒரு சவரன் தங்கம் சுமார் ரூ.1,16,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 24 கேரட் தங்கம் 10 கிராம் ரூ.1,58,180 ஆகவும், 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.12,160 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள், குறிப்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா தொடர்பான போர் பதற்றங்கள், தங்க விலையை பாதித்து வருவதாக கூறப்படுகிறது. உலக சந்தையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் விலை சரிவு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.285 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,85,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு நல்ல வாய்ப்பாக இருப்பதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related News

Latest News